EELAM defence,the real freedom fighters

எமது தாயக தேசத்தின் விடுதலைக்காக ஆயிரமாயிரம் புலி வீரர்கள் களமாடி வீழ்ந்தார்கள். எமது வீர மண்ணின் மார்பைப் பிளந்து அந்த வீர்ர்களைப் புதைத்தோம். உயிரற்ற சடலங்களாக அவர்கள் மண்ணிற்குள் மறையவில்லை. விடுதலையின் விதைகளாகஆவ எமது தாயின் மடியில் அவாகளைப் புதைத்தோம். வரலாற்றுத்தாய் அவர்களை அரவணைத்துக் கொண்டாள். ஆயிரமாயிரம் தனிமனித உயிர்கள் சரித்திரத்தின் கருவூலத்தில் சங்கமித்தன. அவ்வுயிர்கள் கருவாகி, காலத்தால் உருவம்பெற்று, தேசத்தின் சுதந்திரமாக வடிவம் பெற்று வருகிறது. தமிழீழம் என்ற அந்த சுதந்திர தேசம் வரலாற்றின் குழந்தையாக விரைவில் பிறப்பெடுக்கும்.

tamilnadu plus 2 results 2012,+2 thervu mudivugal,annan perarivaalan




ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு தூக்கு கயிறை எதிர் நோக்கி இருக்கும் பேரறிவாளன் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு சிறையில் இருந்தபடியே எழுதினார். தேர்வு முடிவு இன்று வெளிவந்தது . அதன் விவரம் வருமாறு.

ஆங்கிலம் - 169
வரலாறு - 183
பொருளாதாராம் - 182
வணிகவியல் - 198
கணக்குப் பதிவியல் - 179

மொத்தம் - 1096

MAY 18 IN TAMIL EELAM


“இராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியிலும் யாழ்.பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி நிகழ்வு அனுஷ்டிப்பு”

iniya thirumana vaalthukkal



இனிய திருமண வாழ்த்துக்கள்.. மணமக்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறோம்..

mullivaikkal,3rd year remembrance of genocide of the tamils


may 18, Candle light vigil by Global Tamil Organisation


periyar dk and may seventeen iyakkam

tamil eelam the one and only solution..


தமிழீழத்தில் படுகொலை செய்யப்பட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களுக்கு லட்சக்கணக்கில் கூடி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்துவோம்..தமிழினப்படுகொலையின் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி..திரண்டு வாருங்கள்..மே20..மெரீனா கடற்கரை..கண்ணகி சிலை அருகில்..மாலை 5 மணி..

மே 20 நினைவஞ்சலி மெரீனா கடற்கரை



சாதி, மத, கட்சி வேறுபாடுகளின்றி அனைவரும் மெரீனா கடற்கரையில் கண்ணகி சிலையருகே கூடுவோம்..மே20 மாலை 5மணி..உலக அரங்கில் இனப்படுகொலைக்கு எதிரான நம் குரலை பதிவு செய்வோம்..

RAJAPAKSA 2012 THE BITCH IS BACK


மே - 18


மே - 18 
தமிழக சகோதரர்களுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் ஓர் வேண்டுகோள். 

*சகல வீடுகளிலும் கருப்பு கோடி ஏற்றல். 

*மத வழிபாட்டுத் தலங்களில் உறவுகளுக்காக பிரார்த்தனை செய்தல். 

*களியாட்ட நிகழ்வுகளையும் மங்கள காரியங்களையும் முற்று முழுதாக தவிர்த்தல். 

*அரச ஆட்சியாளர்கள் அரச பணிகளை பகிஷ்கரித்தல். 

*இலங்கை அரசின் இன அழிப்பை பறைசாற்றும் பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ளல்.

365 நாட்களும் உங்களுக்காக வாழுங்கள்....
இவ்வொரு நாள் மட்டும் உறவுகளுக்காக வாழுங்கள்...

may 18,naam tamilar mannargudi

மன்னார்குடி நாம் தமிழர் பதாகை...

may 18 chennai

கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் பதினெட்டாம் நாளில், பல்லாயிரம் அப்பாவித் தமிழர்கள் தமிழீழத்தில் இலங்கை அரசால் படுகொலை செய்யப்பட்டார்கள். 21ம் நூற்றாண்டின் மிக பெரிய இனப்படுகொலையாக இது கருதப்படுகிறது. இந்த இனப்படுகொலையில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என தமிழன மக்கள் ஈவிரக்கமின்றி அழித்து ஒழிக்கப்பட்டார்கள். இன்று வரை இதற்கான நியாயம் கிடைக்காமல், அனைத்தையும் இழந்த இனமாக தமிழினம் இலங்கை அரசிடம் சிறைபட்டு இருக்கிறது. உலகெங்கும் எட்டுக்கோடித் தமிழர்கள் இருந்தும் இந்த இனப்படுகொலையை தடுத்து நிறுத்தமுடியவில்லை. இன்றும் இனப்படுகொலைக்கான நீதிகேட்டு பாதிக்கப்பட்டோரின் துயர் துடைக்க ஒற்றை குரலில் நமது கோரிக்கையை வெளிப்படுத்தக்கூட முடியவில்லை. தமிழ்ச் சமூகம் எங்குமே செல்வாக்கு இன்றியும் தத்தம் நாடுகளில் வாழும் சக குடிகளுக்கு இணையான அந்தஸ்து இன்றியும் இரண்டாந்தர குடிமக்களாக வாழ்வதாக அறியப்படுகிறது. இந்த நிலை மாற தமிழகத் தமிழர்கள் போர்சமயத்தில் மெளனமாய் அழுதது போலல்லாமல் தமிழர்கள் அனைவரும் ஒன்றுகூடுதல் அவசியமாகும். தமிழீழ தமிழர்கள் தங்கள் நாட்டை தங்கள் மக்களை தாங்களே ஆளும் வகையில் சுதந்திர தமிழீழ தேசத்தை கட்டியெழுப்ப தமிழர்களாகிய நாம் எல்லா வகையிலும் பாடுபடவேண்டும். அதற்கு அடித்தளமாய் தமிழக தமிழர்களாகிய நாம் ஒன்றினைந்து படுகொலை செய்யப்பட்ட அந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்துவோம். இந்தப் இனப்படுகொலை போரில் உயிரழிந்த மக்களின் நினைவேந்தலுக்காக மே18 அன்று தியாகராயர் நகர் வெங்கட்நாராயணா தெருவில் உள்ள செ.த.நாயகம் பள்ளி மைதானத்தில் மாலை 5 மணிக்கு ஒன்றுகூடி மெழுகுவர்த்தி ஏந்திவோம். நிகழ்ச்சி நிரல் மாலை 5.00 : ஒன்றுகூடல் 5.10 : நினைவேந்தல் பாடல் 5.30 : நினைவேந்தல் நடனம் 6.15 : நினைவேந்தல் உரை 6.30 : நினைவு ஒளியேந்தல் 7.00 : நிகழ்ச்சி நிறைவு

may 18 world genocide day

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களுக்கும். போராளிகளுக்கும் மறத்தமிழர் சேனையின் கண்ணீர் அஞ்சலிகளும் வீர வணக்கங்களும்

tamil freedom fighter brigadier soornam 3rd anniversary



26 வருடங்கள் அயராது உழைத்த வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம் திருகோணமலை எப்பொழுதும் அலை எழுந்து ஆர்ப்பரிக்கும் ஒரு அழகிய நகரம். தமிழினத்தின் தலை நகரம் என்னும் சிறப்பை பெற்று நிமிர்ந்து நிற்கிறது. இந்தத் தலை நகரந்தான் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஈடிணையற்ற போராளிகளை உவந்தளித்தது. மானிப்பாயில் பிறந்த பொழுதும் திருமலை அரசடி வாழைத் தோட்டம் என்னும் ஊர்தான் இவரை சிறு பராயத்தில் இருந்து மாபெரும் வீரனாக வீரத்தை ஊட்டி வளர்த்த மண். தந்தை ஜோசப்புக்கும் தாய் திரேசம்மா (பரிபூரணம்) அவர்களுக்கும் மகனாக பிறந்தவன் தான் பிரிகேடியர் சொர்ணம். இவனது இயற்பெயர் அன்ரனிதாஸ். இவன் இளைமைக் காலத்திலேயே குறும்புத்தனம் மிக்கவனாகவும் உயர்ந்த கம்பீரமிக்க தோற்றமுடைய ஆற்றல் மிக்க சிறுவனாக வளர்ந்து வந்தான். பாடசாலையிலும் திறமையுடன் படித்து உயர் தரம் வரை சென்றான். உடற் பயிச்சியிலும், தற்காப்புக் கலையிலும் சிறப்புறச் செயற்பட்டு சிறந்த மாணவனாக திகழ்ந்தான். மாணவப் பருவத்தில் பொதுப் பணிகள், வேலைகள் என்றால் இவன் தான் முன்னிப்பான். இக்கால கட்டத்தில்தான் தமிழர்கள் வாழ்ந்த மண்ணை சிங்களவர் சிங்கள பூமியாக்க மும்முரமாக ஈடுபட்டிருந்த வேளையில் தமிழர்களுக்கு எங்கும் எதிலும் அநீதி, படுகொலைகள், கற்பழிப்புக்கள் இதைக் கண்டு சிறுவயதிலே கொதித்தெழுந்தான். திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியில் உயர்தரம் பயின்றுகொண்டிருந்த வேளையில் சிங்கள இராணுவத்தினரும் இனவாதிகளினதும் கொடூரங்களைக் கண்டு இவ் அநீதியை தட்டிக்க கேட்க வேண்டும் என்றால் போராடித்தான் ஆகா வேண்டும் என்று தன்னை போராட்டத்தில் இணைத்துக் கொள்ள விரும்பினான் அக்காலகட்டத்தில் பல்வேறு இயக்கங்கள் பல்வேறு வழிகளில் போராடிக் கொண்டிருந்தன. அதில் சரியான பாதையை தேர்தெடுப்பது என்பது அக்கால கட்டத்தில் மிகவும் சிக்கலான விடயம். ஆனால் தனது இலட்சிய போராட்டத்திற்கு சரியானது விடுதலைப் புலிகள் இயக்கம் தான் என்று 12.09.1983ல் தன்னை விடுதலைப் போராட்டத்தில் இணைத்துக் கொள்கிறான். எமது தேசியத் தலைவரின் செயற்பாட்டிற்கு ஊடாகச் சரியானதோர் முடிவெடுத்து எமது போராட்டத்தின் அத்திவாரக்கற்களாக திகழ்ந்த மூத்த தளபதிகளில் இவனும் ஒருவனாக நின்று போராட்டத்தை வளர்த்தெடுத்தான். சொர்ணம் என்ற பெயருடன் சமர்ப்புலி வளரத் தொடங்கியது. பயிற்சிக்காலங்களில் திறம்படச் செயற்பட்ட இவன் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு, மணலாறு மாவட்டங்களிலும் அதன் காடுகளிலும் எதிரியை திணறடித்தவன் இவ் மாவட்டங்களில் பெரும் காடுகளுக் கூடாக நீண்ட நடை பயணத்தை சோர்வின்றி மேற்கொண்டு போராட்ட பணிகளை திறம்படச் செயற்படுத்தினான். வேவு அணி, பதுங்கித்தாக்கும் அணி, விநியோக அணி, வழிகாட்டிகள் என காட்டிற்குள் பல அணிகளை உருவாக்கி கிழக்கு மாகாணத்தில் எதிரியின் தடைகளை எல்லாம் சவாலாக ஏற்று எதிர்த்து நின்று போராடி சாதனைகள் படைத்தவன். இவனது போரிடும் ஆற்றலையும் முடிவெடுக்கும் தன்மையையும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இனங்கண்டு இதற்கமைவாக தலைவர் அவர்களால் கொடுக்கப்படும் கட்டளைகளுக்கு செயல்வடிவம் கொடுத்துக்காட்டிய கட்டளைத் தளபதியாகத் திகழ்ந்தான். “சொர்ணம் கதைக்கிறான் என்றாலே சிங்கள இராணுவத்திற்கு கதிகலங்கும்” அந்த அளவுக்கு தனது போரிடும் ஆற்றலை வளர்த்துக்கொண்டவன். இவ்வாறு இவன் வெற்றிவாகை சூடிய சமர்க்களங்களே அதிகம் ஆகாயக் கடல் வெளிச்சமர், மாங்குளம், தவளைப் பாய்ச்சல், மண்டைதீவு, மண்கிண்டி மலை, இதய பூமி, புலிப்பாய்ச்சல், சூரியக் கதிர், ஓயாத அலைகள் எனப் பல வெற்றிச் சமர்களை எல்லாம் வழிநடத்திய சமரக்களத் தளபதிகளில் இவனும் ஒருவனாகத் திகழ்ந்தான். இவன் படை ஒழுங்கு படுத்தும் சிறப்பை “புலிப்பாய்ச்சல்” நடவடிக்கையில் கண்டு வியப்படைந்தோம். ஜெயசீக்குறு படையினர் மீது திட்டமிட்ட தாக்குதல் மேற்கொள்ள பலமுறை தேசியத் தலைவரிடம் அனுமதி கேட்ட போதும் கிடைக்கவில்லை. ஜெயசிக்குறு படை ஒட்டிசுட்டான் வரை முன்னேறி நிலைகொண்டிருந்த வேளையில் தேசியத் தலைவர் அவர்களால் ஒட்டிசுட்டான், நெடுங்கேணி, கருப்பட்ட முறிப்பு போன்ற படைத்தளங்கள் மீது திட்ட மிட்ட தாக்குதல் மேற்கொள்வதற்கு தளபதி சொர்ணத்திற்கும், தளபதி ஜெயம் அவர்களுக்கும் அனுமதி வழங்கப்படுகின்றது. பல வருடங்களாக ஆமை வேகத்தில் நகர்ந்து வந்த ஜெசிக்குறு இராணுவ நடவடிக்கையை மூன்று நாட்களில் பழைய நிலைக்கு வீரட்டியடித்த பெருமை இந்த வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணத்தையும் சாரும். இம்ரான் பாண்டியன் படையணியின் முதல் தளபதியாக விளங்கிய இவன் தலைவரை பாதுகாக்கும் பணியையும் பொறுப்பேற்றான். திறம்படச் செய்த வீரத்தளபதியுடன் தலைவர் அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட சிலர் துரோகம் இழைத்த போது தலைவருக்கு அருகில் நின்று துரோகத்தை துடைத்தெறிந்தவன். தலைவர் அவர்களின் நம்பிக்கைக் குரியவர்களில் இவனும் ஒருவன். இக்காலகட்டத்தில்தான் திருமணம் செய்யுமாறு தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டார். அதன் படி ஜெனனி என்ற போராளியைத் திருமணம் செய்து 3 பிள்ளைகளை பெற்றெடுத்தான். தனது திருமணத்திற்கு தலைவர் அவர்கள் வருவார் என்பதால் தனது இடுப்பு வேட்டிக்குள் கைத்துப்பாக்கியை வைத்திருந்தபடி தாலி கட்டினான். அந்தளவுக்கு தலைவர் அவர்களின் பாதுகாப்பில் என்நேரமும் விழிப்பாக இருந்து தலைவர் அவர்களை ஆழமாக நேசித்தான். எமது விடுதலைப் போராட்ட விழுமியங்களில் இருந்து என்றுமே அவன் தவறியதில்லை. எமது விடுதலை மரபையே வாழ்வாகக் கொண்டு வாழ்ந்து காட்டியவன். அதே போல் தனது போராளிகளையும் வளர்த்தெடுத்தான். “நான் சொர்ணமண்ணையோட நின்ற நான் என்றால்” வேறு எந்தத் தளபதிகளும் எந்தக் கேள்விகளும் இன்றி அவனுக்கு கடமை வழங்குவார்கள். அந்தளவுக்குப் போராளிகளை புடம் போட்டு வளர்த்த ஆற்றல் மிக்க தளபதியாவான். இயக்கத்தில் இக்கட்டான காலங்களில் எல்லாம் திறம்படச் செயற்பட்டு தடைகளை உடைத்தெறிந்த தளபதிகளில் இவனும் ஒருவன். இந்த வீரத்தளபதி கேப்பாபுலவிலும், தேவிபுரத்திலும் ஊடறுப்பு தாக்குதல்களை வழிநடத்தி நூற்றுக்கணக்கான இராணுவத்தை கொண்று சிங்கள படையை திணறடித்தான். தேவிபுர ஊடறுப்பு தாக்குதலில் விழுப்புண் அடைந்து தனது கால் இயலாத நிலையிலும் முப்படைகளையும் பொறுப்பெடுத்து இறுதிமூச்சு உள்ளவரை எதிரியோடு சண்டைபிடித்துக் காட்டிய வீரத்தளபதி. இவன் தமிழீழ விடியலுக்காகவும் தமிழ் மக்களின் சுபீட்சமான வாழ்விற்காகவும் 26 வருடங்கள் அயராது உழைத்த எமது கட்டளைத் தளபதி. இவனது மூர்க்கமான சமரைக் கண்டு இராணுவம் கதிகலங்கியது. அதன் எதிர் தாக்குதலாக இராணுவம் பெருந்தொகையில் தமிழ் மக்களை கொண்றுகுவித்தது. மக்களுக்காகப் போரிடும் போது மக்களே இறக்கின்றார் என்ற போது இவனால் எதுவும் செய்ய முடியவில்லை. எமது மண்ணினதும் மக்களினதும் விடிவிற்கான போராட்டத்தை நேசித்த இவனால் போராட்டத்தைக் கைவிட்டு சரணடைய முடியவில்லை. எனவே போராட்ட மரபுக்கேற்ப தனது இலட்சிய உறுதிப்பாட்டுடன் தன்னை தமிழீழ விடியலுக்காக 15. 05. 2009ம் நாள் தன்னை விதையாக்குகிறான். விதுரன்.

tamil books list

தமிழில் உள்ள நுல்கள் (அனைத்தும் அல்ல...இந்த பட்டியலை படிக்கவே டயர்ட் ஆகிடுவீங்க....அப்புறம் மீதிய பார்க்கலாம்) 

தொல்காப்பியம்

திருமுருகாற்றுப்படை (நக்கீரனார்)
பொருநராற்றுப்படை (மூடத்தாமக்கண்ணியார்)
சிறுபாணாற்றுப்படை (நத்தத்தனார்)
பெரும்பாணாற்றுப்படை (கடியலூர் உருத்திரங் கண்ணனார்)
முல்லைப்பாட்டு (நப்பூதனார்)
மதுரைக் காஞ்சி (மாங்குடி மருதனார்)
நெடுநல்வாடை (நக்கீரர்)
குறிஞ்சிப் பாட்டு (கபிலர்)
பட்டினப் பாலை (கடியலூர் உருத்திரங்கண்ணனார்)
மலைபடுகடாம் (பெருங் கெளசிகனார்)

[

நற்றிணை (175 புலவர்கள்)
குறுந்தொகை (205 புலவர்கள்)
ஐங்குறுநூறு (5 புலவர்கள்)
பதிற்றுப்பத்து (10 புலவர்கள்)
பரிபாடல் (22 புலவர்கள்)
கலித்தொகை (ஐவர்)
அகநானூறு (பலர்)
புறநானூறு (பலர்)[

திருக்குறள் (திருவள்ளுவர்)
நாலடியார் (சமண முனிவர்கள்)
நான்மணிக்கடிகை (விளம்பி நாகனார்)
இனியவை நாற்பது (பூதஞ் சேந்தனார்)
இன்னா நாற்பது (கபிலர்)
கார் நாற்பது (மதுரைக் கண்ணங்கூத்தனார்)
களவழி நாற்பது (பொய்கையார்)
திணைமொழி ஐம்பது (கண்ணன்சேந்தனார்)
திணைமாலை நூற்றைம்பது (கணிமேதாவியார்)
ஐந்திணை ஐம்பது (மாறன் பொறையனார்)
ஐந்திணை எழுபது (மூவாதியார்)
திரிகடுகம் (நல்லாதனார்)
ஆசாரக்கோவை (பெருவாயில் முள்ளியார்)
பழமொழி நானூறு (மூன்றுறை அரையனார்)
சிறுபஞ்சமூலம் (காரியாசான்)
முதுமொழிக்காஞ்சி (மதுரைக் கூடலூர் கிழார்)
ஏலாதி (கணிமேதாவியார்)
இன்னிலை (பொய்கையார்); 
கைந்நிலை

தகடூர் யாத்திரை (போர்)
முத்தொள்ளாயிரம் (காதல், போர்)
கூத்தநூல்

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் (மேலே பார்க்க)
நல்வழி
கொன்றைவேந்தன்
ஆத்திசூடி
நீதிவெண்பா
நீதிநெறிவிளக்கம்
உலகநீதி
நல்வழி வாக்குண்டாம் நீதிவெண்பா
நீதிநெறிவிளக்கம்
கல்வி ஒழுக்கம்
வாக்குண்டாம்/மூதுரை
நன்நெறி
சிறுபஞ்சமூலம்
பழமொழி நானூறு
ஆசாரக்கோவை
முதுமொழிக்காஞ்சி

பெருங்கதை (சைனம், அரசன் உதயணன் வரலாறு)

சிலப்பதிகாரம் (புத்தம்)
மணிமேகலை (புத்தம்)
சீவக சிந்தாமணி (சைனம்/சமணம், அரசன் சீவகன் வரலாறு, எட்டு மணம் பின் துறவறம், வடமொழி தழுவல்)
வளையாபதி (70 செய்யுள்கள் கிடைகின்றன)
குண்டலகேசி (புத்தம், நிலையாமை)

உதயணகுமார காவியம் (சைனம்/சமணம், அரசன் உதயணன் வரலாறு)
நாககுமார காவியம் (சைனம்/சமணம், தற்போது கிடைக்கவில்லை)
யசோதர காவியம் (வடமொழி தழுவல், உயிர்கொலை கூடாது)
நீலகேசி (நீலி என்ற பெண் சைன/சமண முனிவர் சைன/சமண சிறப்பை எடுத்தியம்பும் காப்பியம்)
சூளாமணி (சைனம்/சமணம், திவிட்டன் விசயன் கதை, துறவு-முக்தி, வடமொழி தழுவல்)

[கு]பன்னிரண்டு திருமுறைகள்
முதல் ஏழு திருமுறைகளும் தேவாரங்கள் எனப்படும். இவை மொத்தம் 8227 பாடல்களை கொண்டவை.

முதலாம் திருமுறை - திருஞானசம்பந்தர் (தேவாரம்)
இரண்டாம் திருமுறை - திருஞானசம்பந்தர் (தேவாரம்)
மூன்றாம் திருமுறை - திருஞானசம்பந்தர் (தேவாரம்)
நான்காம் திருமுறை - திருநாவுக்கரசர் (தேவாரம்)
ஐந்தாம் திருமுறை - திருநாவுக்கரசர் (தேவாரம்)
ஆறாம் திருமுறை - திருநாவுக்கரசர் (தேவாரம்)
ஏழாம் திருமுறை - சுந்தரர் (தேவாரம்)
எட்டாம் திருமுறை - மாணிக்கவாசகர்
திருவாசகம்
திருக்கோவையார்

ஒன்பதாம் திருமுறை:
திருவிசைப்பா:
திருமாளிகைத் தேவர்
சேந்தனார்
கருவூர்த்தேவர்
பூந்துருத்திநம்பி காடநம்பி
கண்டராதித்தர்
வேணாட்டடிகள்
திருவாலியமுதனார்
புருடோத்தமநம்பி
சேதிராசர்
திருப்பல்லாண்டு
சேதிராசர்

பத்தாம் திருமுறை:
திருமந்திரம் - திருமூலர்

பதினோராம் திருமுறை (பதினோராம் திருமுறையில் உள்ள மொத்த நூல்கள் 40 ஆகும்).
திரு ஆலவாய் உடையார் இயற்றியவை:
திருமுகப் பாசுரம்
காரைக்கால் அம்மையார் இயற்றியவை:
திருலாலங்காட்டுத் திருப்பதிகம்
திரு இரட்டை மணிமாலை
அற்புதத்திருவந்தாதி
ஐயடிகள் காடவர்கோன் நாயனார் இயற்றியவை:
சேத்திர வெண்பா
சேரமான் பெருமான் நாயனார் இயற்றியவை:
பொன்வண்ணத்தந்தாதி
திருவாரூர் மும்மணிக்கோவை
திருக்கைலாய ஞானஉலா அல்லது ஆதி உலா
நக்கீர தேவ நாயனார் இயற்றியவை:
கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி
திருஈங்கோய்மலை எழுபது
திருவலஞ் சுழி மும்மணிக்கோவை
பெருந்தேவபாணி
கோபப் பிரசாதம்
கார் எட்டு
போற்றித் திருக்கலிவெண்பா
திருமுருகாற்றுப்படை
திருக்கண்ணப்ப தேவர் திருமறம்
கல்லாட தேவ நாயனார் இயற்றியவை:
திருக்கண்ணப்பதேவர் திருமறம்
கபிலதேவ நாயனார் இயற்றியவை:
மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை
சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை
சிவபெருமான் திருஅந்தாதி
பரணதேவ நாயனார் இயற்றியவை:
சிவபெருமான் திருவந்தாதி
இளம் பெருமான் அடிகள் இயற்றியவை:
சிவபெருமான் மும்மணிக்கோவை
அதிரா அடிகள் இயற்றியவை:
மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை
பட்டினத்துப் பிள்ளையார் இயற்றியவை:
கோயில் நான்மணிமாலை
திருக்கழுமல மும்மணிக்கோவை
திருவிடை மருதூர் மும்மணிக்கோவை
திருவேகம்பமுடையார் திருவந்தாதி
திருவொற்றியூர் ஒருபா ஒருபது
நம்பியாண்டார் நம்பி இயற்றியவை:
திருநாரையூர் விநாயகர் திருஇரட்டை மணிமாலை
கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
திருத் தொண்டர் திருவந்தாதி
ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி
ஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம்
ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை
ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை
ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்
ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை
திருநாவுக்கரசர் திருஏகாதசமாலை

பன்னிரண்டாம் திருமுறை
பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

முதலாம் திருவந்தாதி - 100 பாடல்கள்
இரண்டாம் திருவந்தாதி - 100 பாடல்கள்
மூன்றாம் திருவந்தாதி - 100 பாடல்கள்
திருச்சந்த விருத்தம்
நான்முகன் திருவந்தாதி - பாடியவர் திருமழிசையாழ்வார்
திருவாசிரியம்
திருவாய்மொழி
திருவிருத்தம்
பெரிய திருவந்தாதி
பெருமாள் திருமொழி
திருப்பல்லாண்டு
பெரியாழ்வார் திருமொழி
திருப்பாவை
நாச்சியார் திருமொழி
திருப்பள்ளியெழுச்சி
திருமாலை
பெரிய திருமொழி
திருக்குறுந்தாண்டகம்
திருவெழுகூற்றுஇருக்கை
சிறிய திருமடல்
பெரிய திருமடல்
அமலனாதி பிரான்
கண்ணி நுண்சிறுத்தாம்பு

]நாலாயிரத்திவ்விய பிரபந்தம்
சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கும் அவற்றினை இயற்றியோர்களும்.

திருவுந்தியார் - திருவியலூர் உய்யவந்த தேவநாயனார்
திருக்களிற்றுப்படியார் - திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார்
சிவஞானபோதம் - மெய்கண்ட தேவநாயனார்
சிவஞான சித்தியார் - திருநறையூர் அருள்நந்தி தேவநாயனார்
இருபா இருபஃது - அருள்நந்திசிவாசாரியார்
உண்மை விளக்கம் - திருவதிகை மனவாசகங்கடந்தார்
சிவப்பிரகாசம் - உமாபதிசிவாசாரியார்
திருவருட்பயன் - உமாபதிசிவாசாரியார்
வினாவெண்பா - உமாபதிசிவாசாரியார்
போற்றிப்பஃறொடை - உமாபதிசிவாசாரியார்
உண்மைநெறி விளக்கம் - உமாபதிசிவாசாரியார்
கொடிப்பாட்டு - உமாபதிசிவாசாரியார்
நெஞ்சுவிடுதூது - உமாபதிசிவாசாரியார்
சங்கற்ப நிராகரணம் - உமாபதிசிவாசாரியார்

தசகாரியம் - அம்பலவாண தேசிகர்
சன்மார்க்க சித்தியார் - அம்பலவாண தேசிகர்
சிவாக்கிரமத் தெளிவு - அம்பலவாண தேசிகர்
சித்தாந்தப் பஃறெடை - அம்பலவாண தேசிகர்
சித்தாந்த சிகாமணி - அம்பலவாண தேசிகர்
உபாயநிட்டை வெண்பா - அம்பலவாண தேசிகர்
நிட்டை விளக்கம் - அம்பலவாண தேசிகர்
உபதேச வெண்பா - அம்பலவாண தேசிகர்
அதிசயமாலை - அம்பலவாண தேசிகர்
நமச்சிவாய மாலை - அம்பலவாண தேசிகர்
பரிபூரணம் - ப்பதேசிகர்
நாயனார் (கழி நெடில்) திருவித்தங்கள்
சொக்கநாதக் கலித்துறை - குருஞான சம்பந்தர்
சொக்கநாத வெண்பா - குருஞான சம்பந்தர்
சிவபோகசாரம் - குருஞான சம்பந்தர்
பண்டாரக் கலித்துறை/ஞானப் பிரகாசமாலை - குருஞான சம்பந்தர்
நவரத்தினமாலை - குருஞான சம்பந்தர்
பிராசாத யோகம் - குருஞான சம்பந்தர்
திரிபதார்த்த ருபாதி - குருஞான சம்பந்தர்
தசகாரிய அகவல் - குருஞான சம்பந்தர்
முத்திநிச்சியம் - குருஞான சம்பந்தர்
சமாதி லிங்கப் பிரதிட்டா விதி - திருவம்பல தேசிகர்
சிந்தாந்த நிச்சியம் - திருநாவுக்கரசு தேசிகர்

திருவிவிலியம் - புதிய ஏற்பாடு
விவிலியம் - பழைய ஏற்பாடு


இஸ்லாமிய இலக்கியங்கள்!
100

பல்சந்த மாலை


1400

யாகோபுச் சித்தர் பாடல்கள் - கிபி 15 நூற்


1500

ஆயிரமசலா - 1572
மிகுராசு மாலை - 1590


1600

திருநெறி நீதம் - 1613
சக்கூன் படைப் போர் - 1686
கனகாபிடோகமாலை - 1648
சீறாப் புராணம்


1700

திருமணக் காட்சி
சின்னசீறா


1800

குத்புநாயகம்
முகைதீன் புராணம்
திருமணிமாலை
புதூகுசா அம்
தீர் விளக்கம்
நவமணிமாலை
திருக்காரணப்புராணம்
நாகூர்ப் புராணம்
ஆரிபு நாயகம்
இரவு கூகூல் படைப்போர்
சாதுவிநாயகம்
முசாநபி
அசன்பே சரித்திரம்

மூவருலா - ஒட்டக்கூத்தர் (விக்கிரம சோழன், மகன், பேரன்)

கலிங்கத்துப்பரணி - செயங்கொண்டார் (விக்கிரம சோழனின் கலிங்க நாட்டு வெற்றி)
தக்கயாகப்பரணி - ஒட்டககூத்தர் (தட்சனின் வேள்வியை சிவன் வெற்றி கொள்ளல்)

ஏர் எழுபது - கம்பர்
சரசுவதி அந்தாதி - கம்பர்
சடகோபர் அந்தாதி - கம்பர்
கம்ப இராமாயணம் - கம்பர்

ஆத்திசூடி - அவ்வையார்
கொன்றைவேந்தன் - அவ்வையார்
மூதுரை - அவ்வையார் (நீதி)
நல்வழி - அவ்வையார் (நீதி)
ஞானக்குறள் - அவ்வையார் 2 (யோகம்)
விநாயகரகவல் - அவ்வையார் 3

கந்தபுராணம் - கச்சியப்பசிவாச்சாரியார் - (வடமொழி தழுவல், முருக வரலாறு)
பாகவதம் - செவ்வைச்சூடுவார் - (வடமொழி தழுவல்)
இரகுவமிசம் - அரசகேசரி (வடமொழி தழுவல்)
நளன் கதை - புகழேந்தி (பாரத உபகதை, வடமொழி தழுவல்)
கூர்ம புராணம் - புகழேந்தி (வடமொழி தழுவல்)
இலிங்க புராணம் - புகழேந்தி (வடமொழி தழுவல்)
விநாயக புராணம் - கச்சியப்ப முனிவர் (வடமொழி தழுவல்)
அரிச்சந்திர புராணம் - வீர கவிராயர் (வடமொழி தழுவல்)
ஆதிபுராணம் - மண்டலபுருடர் (சைனர் புராணம், வடமொழி தழுவல்)
மேரு மந்தர புராணம் - வாமன முனிவர் (சைனர் புராணம், வடமொழி தழுவல்)
கோயில் புராணம் - உமாபதி சிவம் (14ம் நூற்றாண்டு)
64 சிவ திருவிளையாடல் புராணங்கள் - பல புலவர்கள், பரஞ்சோதி


அகத்தியம்
தொல்காப்பியம்
இறையனார் களவியல்/இறையனார் அகப்பொருள்
புறப்பொருள் வெண்பாமாலை
அவிநயம்
காக்கை பாடினியம்
சங்க யாப்பு
சிறுகாக்கை பாடினியம்
நற்றத்தம்
பல்காயம்
பன்னிரு படலம்
மயேச்சுவரம்
புறப்பொருள் வெண்பா மாலை
இந்திரகாளியம்
யாப்பருங்கலம்
யாப்பருங்கலக் காரிகை
அமுதசாகரம்
வீரசோழியம்
இந்திரகாளியம்
தமிழ்நெறி விளக்கம்
நேமிநாதம்
சின்னூல்
வெண்பாப் பாட்டியல்
தண்டியலங்காரம்
அகப்பொருள் விளக்கம்
நன்னூல்
நம்பி அகப்பொருள்
களவியற் காரிகை
பன்னிரு பாட்டியல்
நவநீதப் பாட்டியல்
வரையறுத்த பாட்டியல்
சிதம்பரப் பாட்டியல்
மாறனலங்காரம்
மாறன் அகப்பொருள்
பாப்பாவினம்
பிரபந்த மரபியல்
சிதம்பரச் செய்யுட்கோவை
பிரயோக விவேகம்
இலக்கண விளக்கம்
இலக்கண விளக்கச் சூறாவளி
இலக்கண கொத்து
தொன்னூல் விளக்கம்
பிரபந்த தீபிகை
பிரபந்த தீபம்
பிரபந்தத் திரட்டு
இரத்தினச் சுருக்கம்
உவமான சங்கிரகம்
முத்து வீரியம்
சாமிநாதம்
சந்திரா லோகம்
குவலயானந்தம் (மாணிக்கவாசகர்)
குவலயானந்தம் (அப்பைய தீட்சிதர்)
அறுவகை இலக்கணம் - ஏழாம் இலக்கணம்
வண்ணத்தியல்பு
பொருத்த விளக்கம்
யாப்பொளி
திருவலங்கல் திரட்டு
காக்கைபாடினியம்
இலக்கண தீபம்
விருத்தப் பாவியல்
மறைந்துபோன தமிழ் இலக்கண நூல்கள்
வச்சனந்திமாலை


சூடாமணி
திவாகரம்
பிங்கலந்தை
கயாதரம்


அகராதி நிகண்டு
சதுரகராதி
க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி


அபிதானகோசம்
அபிதான சிந்தாமணி
தமிழ்க் கலைக்களஞ்சியம் - 10 தொகுதிகள்
அறிவியல் களஞ்சியம் - 19 தொகுதிகள்
வாழ்வியற் களஞ்சியம் - 15 தொகுதிகள்
சைவக் களஞ்சியம் - அருணாசலம். கா. - 12 தொகுதிகள்
இஸ்லாமிய கலைக்களஞ்சியம் - அப்துற் றகீம் - 4 தொகுதிகள்
குழந்தைகள் கலைக்களஞ்சியம் - 10 தொகுதிகள்
சிறுவர்களுக்கான பொது அறிவுக் கலைக்களஞ்சியம்
அனுராகம் சிறுவர் கலைக்களஞ்சியம் - ~8 தொகுதிகள்
மருத்துவக் கலைக்களஞ்சியம் - 13 தொகுதிகள்
சித்த மருத்துவம் - 6 தொகுதிகள்
இந்தியத் தத்துவக் களஞ்சியம் - சோ. ந. கந்தசாமி - 3 தொகுதிகள்
திராவிட கலைக்களஞ்சியம்
தமிழிசைக் கலைக்களஞ்சியம் - 4 தொகுதிகள்
தமிழ் இலக்கிய வரலாறு - மு. அருணாச்சலம் - ~10 தொகுதிகள் [1]
பிரிட்டானிகா தகவல் களஞ்சியம் (தமிழ்) - 3 தொகுதிகள்
தமிழ் இலக்கிய விமர்சனக் கலைக்களஞ்சியம்
தமிழ் விக்கிப்பீடியா
வேளாண்மைக் கலைக்களஞ்சி

LinkWithin

Related Posts with Thumbnails